Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு? தீயாய் பரவும் வதந்தியால் பரபரப்பு!

Published

on

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்த வதந்தி ஒன்று இணையதளங்களில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து ராமராஜன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இருக்கும் ராமராஜன் முழு ஓய்வு எடுத்து வருகிறார் என்பதும் அவ்வப்போது அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ராமராஜன் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் ராமராஜன் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமராஜன் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் அவரது அவரது உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்தி முழுக்க முழுக்க பொய்யானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராமராஜன் மட்டுமின்றி செந்தில், கவுண்டமணி, உள்பட பல பிரபல நடிகர்களின் உடல்நிலை குறித்து அடிக்கடி வதந்திகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சித்தார்த் காலமாகி விட்டதாக கூட யூடியூபில் ஒருசில வீடியோ வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலங்கள் குறித்து அடிக்கடி இவ்வாறு வதந்திகள் வெளியாகி வருவது வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?