சினிமா
யாத்திசை விமர்சனம்: பாண்டியர்களையும் எயினர்களையும் கண் முன் காட்டிய யாத்திசை.. எப்படி இருக்கு?

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக லோ பட்ஜெட்டில் சேர, சோழ, பாண்டியர்களின் கதையை பிரில்லியன்ட்டாக இயக்குநர் தரணி ராசேந்திரன் கொடுத்து தலைநிமிர்ந்து நிற்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
பொன்னியின் செல்வன் படம் பெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ராய் முதல் ஜெயம் ரவி வரை ஏகப்பட்ட டாப் நடிகர்களை வைத்து உருவாக்கினாலும், அந்த படம் நாடகம் போன்றே உள்ளதாக ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

#image_title
இந்நிலையில், அறிமுக நடிகர்கள் நடிப்பில் அறிமுக இயக்குநர் இயக்கிய யாத்திசைக்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான சமந்தாவின் சாகுந்தலம் படத்தை இயக்கிய இயக்குநர் எல்லாம் இந்த படத்தை பார்த்து வரலாற்று படத்தை எப்படி இயக்க வேண்டும் என கற்றுக் கொள்ளலாம் என்றே கூறுகின்றனர்.
இது போன்ற படங்களுக்கு R n D செய்வது எவ்வளவு முக்கியம் என்றும் மிரட்டலான காட்சிகளை பெரிய பட்ஜெட் இல்லாமலே சிக்கன பட்ஜெட்டிலேயே காட்சி மூலமாகவும் நடிப்பவர்கள் மூலமாகவும் காட்ட முடியும் என்பதை தரணி ராசேந்திரன் பலருக்கும் புரியும் படி எடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
சேரர், சோழர்கள் மற்றும் பல்லவர்கள் உடன் சேர்த்து எயினர் கூட்டத்தையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடிய பாண்டிய மன்னன் ரணதீர பாண்டியனை வீழ்த்த வேண்டும் என்கிற வெறியில் எயினர் கூட்டத்தின் தலைவன் கொதி (சேயோன்) தனது சிறிய படையுடன் போருக்கு தயாராகிறான்.

#image_title
முதல் பாதி முழுக்கவே கொதி தான் படத்தின் நாயகன் என்று சொல்ல வேண்டும். பெரும் படை கொண்ட பாண்டியனின் கோட்டையின் ஒரு பகுதியையே முற்றுகையிட்டு இடைவேளையின் போது வெற்றியடைகிறான்.
அதுவரை ரணதீரன் (சக்தி மித்ரன்) பற்றிய பில்டப்புகளே காட்டப்பட்டு வந்த நிலையில், எயினர் கூட்டம் கைப்பற்றிய தனது கோட்டையை திரும்ப பெற அவன் என்ன செய்கிறான் என்பது தான் இந்த யாத்திசை படத்தின் முதல் பாக கதை.
இரண்டாம் பாகமும் இந்த படத்திற்கும் வரப்போகிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து, இசையமைப்பாளர் சக்கரவர்த்தி கலை இயக்குநர் ரஞ்சித் குமார் உள்ளிட்ட அனைவருமே பெரும் பலமாக உள்ளனர்.
சில சிஜி காட்சிகள், அறிமுகமில்லாத நடிகர்கள் சில இடங்களில் நீளமான காட்சிகளை வைத்து போர் அடிப்பது உள்ளிட்ட சில குறைகள் இருந்தாலும் இந்த எக்ஸ்பீரிமன்ட் படத்தை ஒருமுறை தாராளமாக பார்க்கலாம். யாத்திசை