இந்தியா
விமானத்தை மிஸ் பண்ணிய பயணி.. வெடிகுண்டு இருப்பதாகக் கூறி விமானத்தை நிறுத்திப் பரபரப்பு!

ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டிய விமானத்தை மிஸ் செய்த பயணி, விமான நிலையத்தில் வெடிகுண்டு உள்ளதாகப் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானங்களில் பயணிக்கும் போது, விமானம் புறப்படுவதற்குக் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு விமான நிலையத்தில் இருக்க வேண்டும்.
ஆனால், சில நேரங்களில் சில பயணிகள் தாமதமாக வந்தது விமானத்தைத் தவறவிடுவது வழக்கமான ஒன்றுதான்.

அப்படி திங்கட்கிழமை ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டிய விமானத்தைப் பிடிக்கத் தாமதமாக வந்த பயணியை இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளார். அதை ஏற்க முடியாமல் சண்டை போட்ட அந்த நபர், சில நிமிடங்களுக்குப் பிறகு 100 அவசர எண்ணை அழைத்து விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாகக் கூறிய நிலையில் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் சோதனைகள் நடைபெற்று சில விமானங்கள் தாமதமாக புறப்படும் நிலை ஏற்பட்டும் பயணிகளை அசவுகரியம் ஏற்படுத்தியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை விளக்கிய பிறகு சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று ஒரு சம்பவம் டெல்லியிலிருந்து ஒதிசா செல்லும் இண்டிகோ நிறுவன விமானத்திலும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.














