கிரிக்கெட்
ஐபிஎல் 2023 முழு அட்டவணை வெளியீடு.. சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் விபரங்கள்..!

கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று கூறப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 16 வது ஆண்டாக ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி மற்றும் அனைத்து போட்டிகளின் விவரங்கள் குறித்த அட்டவணை வெளியாகி உள்ளது.
மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்றும், முதல் போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கிடையே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிஎஸ்கே அணிக்கு மட்டும் 14 போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் ஏழு போட்டிகள் சென்னைலும் 7 போட்டிகள் மற்ற மைதானங்களிலும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது என்பதும் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே போட்டிகளின் விபரங்கள்:
மார்ச் 31: குஜராத் – சிஎஸ்கே – அகமதாபாத்
ஏப்ரல் 3: சிஎஸ்கே – லக்னோ – சென்னை
ஏப்ரல் 8: மும்பை – சிஎஸ்கே – மும்பை
ஏப்ரல் 12: சிஎஸ்கே – ராஜஸ்தான் – சென்னை
ஏப்ரல் 17: பெங்களூரு – சிஎஸ்கே – பெங்களூரு
ஏப்ரல் 21: சிஎஸ்கே – ஐதராபாத் – சென்னை
ஏப்ரல் 23: கொல்கத்தா – சிஎஸ்கே – கொல்கத்தா
ஏப்ரல் 27; ராஜஸ்தான் – சிஎஸ்கே – ஜெய்பூர்
ஏப்ரல் 30: சிஎஸ்கே – பஞ்சாப் – சென்னை
மே 4: லக்னோ – சிஎஸ்கே – லக்னோ
மே 6: சிஎஸ்கே – மும்பை – சென்னை
மே 10: சிஎஸ்கே – டெல்லி – சென்னை
மே 14: சிஎஸ்கே – கொல்கத்தா – சென்னை
மே 20: டெல்லி – சிஎஸ்கே – டெல்லி






















