சினிமா
நயன்தாரா அந்த விஷயத்துக்கு செட் ஆக மாட்டாரு.. குட்டி நயன்தாரா அனிகாவா இப்படி பேசுறது!

என்னை அறிந்தால், நானும் ரவுடி தான், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை அனிகா 18 வயதை எட்டிய நிலையில், தெலுங்கில் புட்ட பொம்மா படத்திலும், மலையாளத்தில் ஓ மை டார்லிங் படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
சமீபத்தில் வெளியான ஓ மை டார்லிங் படத்தில் லிப் லாக் சீனில் எல்லாம் தயக்கம் காட்டாமல் நடித்து குட்டி நயன்தாரா என்கிற பெயரை அப்படியே காப்பாற்றி விட்டார் அனிகா சுரேந்திரன்.

#image_title
நயன்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா சுரேந்திரன், இளம் வயது நயன்தாராவாக நானும் ரவுடி தான் படத்தில் நடித்து இருப்பார். பார்க்க அப்படியே நயன் போலவே இவர் இருப்பதால் ரசிகர்கள் இவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து அப்படியே குட்டி நயன்தாரா என்றே இவரை அழைத்து வருகின்றனர்.

#image_title
இந்நிலையில், அந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனிகா சுரேந்திரன் நடிகை நயன்தாரா எல்லா விஷயத்திலும் செம பர்ஃபெக்ட்டாக இருப்பார். ஆனால், மேக்கப் போட மட்டும் ரொம்ப நேரத்தை எடுத்துக் கொள்வார் என பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஏற்கனவே மாளவிகா மோகனன் நயன்தாரா பற்றி பேசினார் என்கிற சர்ச்சை வெடித்து வரும் நிலையில், அனிகா சுரேந்திரன் இப்படி நயன்தாராவை ஆரம்பத்திலேயே டார்கெட் செய்து பேசி பெரிய ஆளாக மாற ஐடியா பண்ணிட்டாரா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.























