தமிழ்நாடு
ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

பொதுத் தேர்வின் போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை அடுத்து தற்போது ஆசிரியர்களும் பொதுத் தேர்வின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது .
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுநாளும் அதனை அடுத்து 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த பொதுத் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகின்றனர் .
இந்த நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு மைய வளாகத்தில் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் தேர்வு மையத்தில் செல்போன் வைத்திருபது கண்டுபிடிக்கப்பட்டால் துறை ரீதியிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.




















