சினிமா செய்திகள்
கேஜிஎப் 3’ படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி? ஹாலிவுட் நடிகரும் இணைகிறார்!

கேஜிஎப் 2 படத்தில் யாஷ் மற்றும் இயக்குனர் பிரசாந்த் நீல் ஆகிய இருவரும் சம்பளம் வாங்காமல் பங்குதாரர்களாக பணிபுரிந்ததால் அந்த படத்தின் பட்ஜெட் 100 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் வசூலில் தயாரிப்பாளர், யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகிய மூவரும் சமமாக பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கேஜிஎப் 3’ படத்தின் பட்ஜெட் 500 கோடி என்ற தகவல் வெளிவந்துள்ளது. கேஜிஎப் 2 போலவே இந்த படத்திலும் யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகிய இருவரும் சம்பளம் வாங்கவில்லை என்றும் பங்குதாரர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ஹாலிவுட் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கேஜிஎப் 2 படத்தை விட இருமடங்கு மாஸ் ஆக்ஷன் இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுவும் தங்கச்சுரங்கம் பற்றிய கதைதான் என்றும் இதுவரை சொல்லாத ஒரு முக்கிய ரகசியத்தை இந்த படத்தில் சொல்ல இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .
இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.


















