தமிழ்நாடு
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வெளிநாட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பிய தூதரகம்!

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ருமேனியா நபருக்கு ருமேனியா தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் கடந்த சில நாட்களாக கோவையில் திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
நான் உலகம் முழுவதும் சுற்றி உள்ளேன் என்றும் ஆனால் உலகிலேயே இலவசமாக பேருந்து பயணம் செய்ய அனுமதிக்கப் படுவது தமிழகத்தில் தான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோவை திமுகவினர் வைரலாக்கினர் என்பதும் வெளிநாட்டவர்கள் கூட திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றும் விளம்பரம் செய்தனர்.
இந்த நிலையில் தொழில்முறை நிமித்தமாக வந்தவர் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து ஸ்டீபன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியாவில் உள்ள ருமேனிய தூதரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நோட்டீசை அடுத்து அவர் நேரில் ஆஜராகி என்ன விளக்கம் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


















