சினிமா செய்திகள்
ஓ சொல்றியா, ஓஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு அர்த்தம் கூறிய பாடலாசிரியர் விவேகா!

சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சொல்றியா ‘ஓ சொல்றியா, ஓஓ சொல்றியா மாமா என்ற பாடல் உள்ளது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் உள்ள ஆண்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடல் குறித்து பாடலாசிரியர் விவேகா விளக்கமளித்துள்ளார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நான்தான் எழுதினேன் என்றும், ‘ஓ சொல்றியா, ஓஓ சொல்றியா மாமா என்ற பாடல் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த பாடலுக்கு ஆண்கள் சங்கம் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகளை பார்த்தேன். ஆனால் ஒட்டுமொத்த ஆண்கள் சங்கமமும் தியேட்டரில் இந்த பாடலை எழுந்து கொண்டாடி வருகின்றனர் என்பதை அந்த ஆண்கள் சங்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ‘ஓ சொல்றியா, ஓஓ சொல்றியா மாமா என இந்த பாடலை குறித்து கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த பாடல் ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா என்றுதான் வரும் என்றும், அதற்கு அர்த்தம் ’என்னை நீ ஏற்றுக் கொள்கிறாயா ஏற்றுக் கொள்ளவில்லையா? என்பது தான் அந்த வரியின் அர்த்தம் என்று கூறியுள்ளார். விவேகாவின் இந்த விளக்கம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.













