Connect with us

தினபலன்

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (16/12/2021)

Published

on

16-Dec-21 

வியாழக்கிழமை

மேஷம்:

இன்று தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

ரிஷபம்:

இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும். பணவரத்து சீராக இருக்கும். வேலை பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்:

இன்று கை, கால் வலி, உடல் சோர்வு உண்டாகலாம். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும் படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வழக்கில் வெற்றி அல்லது தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

இன்று புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல்அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்:

இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி:

இன்று வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள்  அலைச்சலை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்:

இன்று குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக செயலாற்றுவீர்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும்.எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:

இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதியஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த  ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்:

இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும். எந்த காரியத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:

இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும்

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 

மீனம்:

இன்று எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும் 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தொழில்நுட்பம்2 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா2 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்2 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்3 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா1 நாள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்1 நாள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்1 நாள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்1 நாள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா4 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Kunstblut aus kleidung entfernen : so gehen die flecken raus. komplet løsning til hjemmeservice. İhtiyacınıza uygun forklift kiralama hizmetleri için bizimle iletişime geçebilir ve size en uygun çözümleri keşfedebilirsiniz.