சினிமா
அண்ணாத்த ரிசல்ட்..ரஜினியின் அதிரடி முடிவு….அடுத்த படத்தின் இயக்குனர் அவரா?..

சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. தீபாவளிக்கு வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி நல்ல வசூலை பெற்றது. ஆனால், மழை காரணமாக படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அப்செட்டில் இருக்கிறார் ரஜினி என ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அதோடு, இப்படத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த படத்தையும் நடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பாராஜ், நெல்சன் என பட்டியல் நீண்டது. இதில், கார்த்திக் சுப்பாராஜுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ரஜினியின் முடிவோ வேறு மாதிரி இருக்கிறது என்கிறது அவரின் நெருங்கிய வட்டாரம். லிங்கா, காலா, தர்பார், அண்ணாத்த என தொடர்ச்சியாக அவரின் படங்கள் மெகா ஹிட் அடிக்காததால் அப்செட்டில் இருக்கிறாராம் ரஜினி. சந்திரமுகி போல் மீண்டும் ஒரு மாஸ் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும். சிறந்த கதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் விரும்புகிறாராம்.
இதுவரை 5 இயக்குனர்கள் அவருக்கு கதை சொல்லியிருக்கிறார்கள். அனைவருமே ஒரு வரிக்கதையை மட்டும் கூறிவிட்டு, உங்களுக்கு பிடித்திருந்தால் டெவலப் செய்து சொல்கிறேன் என ஒரே மாதிரி கூறுகிறார்களாம். இதையடுத்து முன்பெல்லாம் வருடத்திற்கு 28 படங்கள் கூட நடித்தேன். அவ்வளவு கதை கிடைத்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை என தனக்கு நெருங்கிய இயக்குனர் ஒருவரிடம் போன் செய்து புலம்பியுள்ளாராம்.

அடுத்து ஒரு அதிரடியான கதை மற்றும் வேகமாக படப்பிடிப்பை நடத்தி விரைவில் வெளியிட வேண்டும் என நினைக்கும் அவருக்கு உடனே ஞாபகம் வந்தது கே.எஸ்.ரவிக்குமார்தானாம். பல மாதங்களாகவே தனக்கென ஒரு கதையை உருவாக்கும் படி கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டு வருகிறார் ரஜினி. எனவே, விரைவில் அவருடன் இணைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.


















