தமிழ்நாடு
திருச்சி எஸ்.ஐ.பூமிநாதன் கொலை வழக்கு: 2 சிறுவர்கள் உள்பட நால்வர் கைது!

திருச்சியில் எஸ்.ஐ. பூமிநாதன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
சமீபத்தில் திருச்சியில் சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் என்பவர் ஆடு திருடிய நபர்களை பிடிப்பதற்காக முயற்சி செய்த போது ரயில்வே கேட் பகுதி அருகே சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் தற்போது நான்கு பேர் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எஸ்.ஐ. கொலை வழக்கில் இரண்டு சிறுவர்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






















