சினிமா செய்திகள்
”தங்க மகன்” தனுஷ்க்கு வாழ்த்துக்கள்: பாரதிராஜாவின் பிறந்தநாள் வாழ்த்து கவிதை

தங்க மகன் தனுஷ்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என இயக்குனர் இமயம் பாரதிராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள்
நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுருவி நம் உணர்வோடு
உறவு கொண்டதாக அமைந்து விடும்.
ஆனால் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான
குணநலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக
இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவது உண்டு
நிஜ வாழ்க்கையில் எப்படியோ, அதை திரையிலும்
பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே. அதில் உன்னை நான்
முதன்மையானவனாக பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம்,
விருதுகள் வென்று குவித்தாலும் ‘நான்’ என்கின்ற அகந்தை
அற்ற பணிவு, சிறந்த கலை தொழில்நுட்ப அறிவு. இது போதும்டா..
இன்னும் நூறு உலக விருதுகள் உன் வீட்டுக்கதவைத் தட்டும்.
பேரன்புமிக்க தங்கமகன் தனுஷ் இன்றைய நன்நாளில்
எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ
வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.






















