சினிமா செய்திகள்
ஜூலை 30-ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது.
பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை, க/பெ.ரணசிங்கம், கனா உள்ளிட்ட படங்களில் நடத்து ரசிகர்களிடம் நல்ல பெயரையும் பெற்றுள்ளார்.
இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், விஜய் டிவி கார்த்திக் இயக்கிய திட்டம் இரண்டு படம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. திட்டம் இரண்டு படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் திட்டம் இரண்டு படம் வருகின்ற ஜூலை 30-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.