இந்தியா
மதுக்கடையில் ராவா சரக்கடிக்கும் குரங்கு.. வைரல் வீடியோ…..

மனிதர்களில் சிலர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் எனும் பெயரில் அரசே மதுபானக்கடைகளை நடத்தி வருகிறது. மாதம் ரூ.200 கோடி வியாபாரம் ஆகி வருகிறது.
இந்நிலையில், ஒருபக்கம் மனிதர்களை போல் அனைத்து விஷயங்களையும் செய்யும் குரங்கு ஒரு மாதுபானக்கடையில் புகுந்து சரக்கடிக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குரங்கு தண்ணீர் குடிப்பதை பார்த்திருக்கிறோம். ஜூஸ் குடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த குரங்கு தன் வாயாலேயே சரக்கு பாட்டிலை திறந்து குடிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. கடைக்காரர் பிஸ்கெட்டை கொடுக்கிறார். ஆனால், சரக்குதான் வேணும் என்பது போல் குரங்கு குடிக்கும் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் உள்ள மதுபான கடையில் நடந்துள்ளது.
https://twitter.com/smaheshwari523/status/1415340792311279617?ref_src=twsrc%5Etfw
























