தமிழ்நாடு
தமிழக முதல்வருடன் செல்பி எடுத்த நடிகை யாஷிகா ஆனந்த்: வைரல் புகைப்படம்!

தமிழக முதல்வருடன் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தமிழக முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக பல திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சைக்கிளில் உடற்பயிற்சி செய்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தளங்களில் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சைக்கிளில் சென்ற முதல்வருடன் பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சைக்கிளிங் சென்று கொண்டிருந்தபோது நடிகை யாஷிகா ஆனந்த் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் சமூக வலைதளங்களில் அவர் ஆக்டிவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.









