சினிமா செய்திகள்
கொரோனா நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா!

கொரோனா நோயாளியின் ஆசையை நடிகர் விஜய் தேவரகொண்டா பூர்த்தி செய்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது தான் மிகவும் நேசிக்கும் விஜய் தேவரகொண்டா அவர்களிடம் பேச வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். இதனை அவர் தன்னுடைய நண்பர் ஒருவரிடம் கூறிய நிலையில் விஜய் தேவர்கொண்டா ரசிகர் மன்ற நிர்வாகி விடம் இதுகுறித்து கூறப்பட்டது.
உடனடியாக விஜய்தேவரகொண்டாவிடம் இந்த செய்தி கூறப்பட்ட நிலையில் அவர் தனது ரசிகரின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். இதனை அடுத்து ரசிகர் மன்ற நிர்வாகி உதவியுடன் கொரோனா நோயாளியான தனது ரசிகரிடம் தொலைபேசியில் விஜய் தேவர்கொண்டா சில நிமிடங்கள் பேசினார். இதனை அடுத்து அந்த ரசிகர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு விஜய்தேவரகொண்டாவுக்கு நன்றி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ரசிகர் ஒருவரின் ஆசையை விஜய்தேவரகொண்டா பூர்த்தி செய்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.







