கிரிக்கெட்
IPL – மும்பை அணியில் நியூஸி., ஆல்-ரவுண்டர்; முதல் முறையாக களமிறங்குகிறார்!

கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ‘பரம எதிரிகள்’ என்று வர்ணிக்கப்படும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்மை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
சென்னை அணி இதுவரை 2021 ஐபிஎல் சீசனில் தான் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று, அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை, 6ல் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4வது இடத்தில் தள்ளாடி வருகிறது. இப்படியான சூழலில் இன்றைய போட்டி நடக்கிறது.
Jimmy Neesham is all set to make his debut for the @mipaltan ????#MIvCSK #VIVOIPL pic.twitter.com/ImPFrepsjl
— IndianPremierLeague (@IPL) May 1, 2021
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பையும் சென்னையும் இப்போது தான் முதல் முறையாக மோதிக் கொள்கின்றன. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் முறையாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம் களமிறங்க உள்ளார். அவர் இஷன் கிஷானுக்கு பதிலாக அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான நீஷம், சென்னை அணிக்கு சவாலாக இருப்பார் என சொல்லப்படுகிறது.







