கிரிக்கெட்
IPL- சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்ட வார்னர்; கொதிக்கும் ரசிகர்கள்!

கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் ஜரூராக நடந்து வருகிறது. இதுவரை நடப்பு சீசனில் 26 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் தாங்கள் விளையாடிய 6 போட்டிகளில் ஐந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி, தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேனான டேவிட் வார்னர். அவர் தான் கடந்த சில சீசன்களாக ஐதராபாத்தின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் ஐதராபாத் ஒருமுறை கோப்பையையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில், இந்த முறை தனிப்பட்ட முறையிலும் ஒரு அணியாகவும் ஐதராபாத்தை வலுவாக வழி நடத்தாத காரணத்தால், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது.
இது குறித்து ஐதராபாத் அணி, ‘இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் செயல்படுவார். மேலும் வரும் போட்டிகளில் இருந்து வெளிநாட்டு வீரர்களின் காம்போவை மாற்ற உள்ளோம்.
டேவிட் வார்னர், எங்கள் அணிக்கு நிறைய செய்திருக்கிறார் என்பதை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் வரும் போட்டிகளிலும் எங்கள் அணிக்கு முழு ஆதரவு கொடுப்பார் என நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் டேவிட் வார்னர் குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி எடுத்த இந்த முடிவு ஏற்க முடியாதது என்றும், வார்னருக்கு இழைக்கும் துரோகம் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.
the disrespect Warner gets is unreal. absolute freak. Insane stats. one of the greats of the IPL. pic.twitter.com/GTTbkOCVQ1
— Archit. (@IndianJoeyy) May 1, 2021
ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை இது வரை 148 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர், 42.22 சராசரியில் 5,447 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டாப் ரன் அடித்தவர்கள் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள் வார்னர் இருக்கிறார்.
Warner deserves better treatment man. He is in the top 5 all time greats of the league.
SRH qualified to KOs in 2016, 2017, 2019, 2020 under him.
Just 4-5 games didn’t go well and he gets ditched.— Sai Krishna???? (@SaiKingkohli) May 1, 2021
மேலும் கடந்த 2016, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்று வரை அழைத்துச் சென்றவர் வார்னர். ஒரு முறை கோப்பையையும் கைப்பற்றித் தந்துள்ளார். இப்படி பல சாதனைகள் புரிந்துள்ள வார்னரை, அதிர்ச்சியளிக்கும் வகையில் சன்ரைசர்ஸ் அணி நீக்கியுள்ளது சரி கிடையாது என்று ரசிகர்கள் மல்லுக்கட்டி வருகின்றனர்.
Carried the team in his shoulders for 6 long years
Smashed runs for fun and ruled the IPL when everyone else were struggling
Always stood up for the team like a Warrior during the downs
Won the prestigious IPL trophy, held it high with pride and dedicated to all the fans pic.twitter.com/ZlOukz81JE
— DW31 FOREVER (@jersey_no_46) May 1, 2021
#Warner #SunrisersHyderabad This man deserves to keep the position, dont know wether he gave up willingly, sunrisers are in lack of strong supporting players , the team itself is held by just 4 of them , warner, kane williamson, johny bairstow, rasheed khan. All the best new cap pic.twitter.com/i8bcM4ibNH
— Aakash Simson (@champ_is_here25) May 1, 2021







