இந்தியா
1300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் கவலை

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தை ஆரம்பமான ஒரு சில நிமிடங்களில் சென்செக்ஸ் 1300க்கும் அதிகமான புள்ளிகள் குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.
சற்றுமுன் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1378 புள்ளிகள் குறைந்து 48,216 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.அதேபோல் நிப்டி 409 புள்ளிகள் குறைந்து 14,225 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75.05 உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தை இந்த வாரத்தின் முதல் நாளிலேயே ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்துள்ளது முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இன்று மட்டும் ஏராளமான தங்களது முதலீடுகளை இழந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே பங்குச்சந்தையில் திடீர் சறுக்கல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் சென்செக்ஸ் 52,000ஐ தாண்டி இருந்த நிலையில் தற்போது 4000 புள்ளிகள் இரண்டு மாதங்களில் குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















