தமிழ்நாடு
புதுவையிலும் கூட்டணி அமைக்கும் கமல்: என்.ஆர். காங்கிரஸ் இணைகிறதா?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது என்பதும் இந்த கூட்டணியில் தற்போது சரத்குமார் மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகள் இணைந்து இருந்தாலும் இன்னும் ஒரு சில நாட்களில் வேறு சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் மட்டுமன்றி புதுவையிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி தொடர்பான பணிகளை ஆரம்பித்துள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி என்ஆர் காங்கிரஸ் உடன் கைகோர்க்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
பாஜக மற்றும் என்ஆர் காங்கிரஸ் இடையே கூட்டணி இழுபறி நீடித்து வரும் நிலையில் ரங்கசாமியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரசுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட மக்கள் நீதி மய்யம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனை அடுத்து கமல்ஹாசன் மற்றும் ரங்கசாமி ஆகிய இருவரும் விரைவில் நேரில் சந்தித்து இந்த கூட்டணியை உறுதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.




















