இந்தியா
இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்ட்ட நாட்டு வேட்டை இன நாய்கள்..!- வைரல் புகைப்படங்கள்

இந்திய விமானப் படை நாட்டு வேட்டை இன நாய்கள் இணைக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவைச் சேர்ந்த நாட்டு வேட்டை நாய்கள் விமான விபத்துகளைத் தவிர்க்க பெரிதாய் உதவுகின்றனவாம்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வேட்டையாடும் திறன் கொண்ட நாட்டு நாய்கள் இனமாக முதோல் நாய்கள் உள்ளன. இந்த நாய்கள் மிகவும் வேகமாக செயல்படும் திறன், கூர்மையான பார்வை, வேட்டை குணம் ஆகியனவற்றைக் கொண்ட இனமாகும். இந்த இன நாய்களைத் தான் தற்போது இந்திய விமானப் படையில் இணைத்துள்ளனர்.
இந்த நாய்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இப்போது தான் விமானப் படை சார்பாக விமான ஓடுதளங்களில் இந்த முதோல் இன நாய்கள் பணியமர்த்தப்பட உள்ளன. இந்த முதோல் இன நாய்கள் விமான ஓடுதளங்களில் மேயும் பறவைகளை விரட்டி விமான விபத்துகளைத் தவிர்க்க பெரிதாய் உதவுமாம்.

விமான ஓடுதளங்களில் அமர்ந்திருக்கும் பறவைகளால் விமானங்களில் சேதாரம் ஏற்படுவதும் அதனால் விபத்துகள் ஏற்படுவதையும் தவிர்க்க இந்த நாய்கள் உதவ உள்ளன. வேட்டைத் திறனும் கூர்மையான பார்வையும் இருப்பதால் விமானப் படை சார்பில் இந்த நாய் இனம் இணைக்கப்பட்டுள்ளது.















