சினிமா செய்திகள்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை வைத்து ஒரு படம்… கதாநாயகியாக அறிமுகமாகும் வாரிசு நடிகை..!

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஒரு படம் உருவாக உள்ளது.
இந்த படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் நாயகன் ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களுடன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சேரன், டேனி, சரவணன், விஜய் டிவி ஜாக்குலின் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்துக்கான பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தீபாவளி வெளியீட்டைக் குறிவைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் தொடங்கி உள்ளது.

கிராமத்து பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தப் படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வாரிசு நடிகை ஒருவர் நாயகி ஆக அறிமுகம் ஆக உள்ளார். 80-களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே முன்னணியில் இருந்த கதாநாயகன் ராஜசேகர். அதேபோல் அதே காலகட்டத்தில் இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை ஜீவிதா. இவர்கள் இருவரும் படங்கள் மூலம் பழகி காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.

ராஜசேகர்- ஜீவிதா தம்பதியரின் மகளான சிவாத்மிகா தான் இந்தத் தமிழ்ப்படம் மூலம் சினிமாவில் நாயகி ஆக அறிமுகம் ஆகி உள்ளார்.


















