தமிழ்நாடு
ரஜினியை விமர்சிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் திடீர் பரபரப்பு!!

தேனியில் புத்தாண்டன்று விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார், எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு முடிவடைந்தது. இதனையடுத்து தற்போது இதே எதிர்பார்பு விஜய் மீது ஏற்பட்டுள்ளது. விஜய்யின் ஒவ்வொரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் போதும், அவருடைய பிறந்தநாளன்றும் அவரது ரசிகர்கள் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். குறிப்பாக நாளைய முதல்வரே, தலைவா நீ தான் எங்களுக்கு எல்லாம் என அரசியலுக்கு வர வேண்டும் என்று போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தேனியில் புத்தாண்டு அன்று விஜய் ரசிகர்கள் ஒட்டிய திடீர் போஸ்டர்கள் ரஜினியை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த போஸ்டர்களில், ‘யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் நீங்கள் வரவேண்டும் தலைவா. யாரை நம்பியும் நாம் இல்லை, மக்களைத்தவிர’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இதே போல் மற்ற சில இடங்களில், ‘2021 புதிய வருடம், புதிய கட்சி மக்கள் இயக்கம், புதிய அரசியல், புதிய தலைவர், புதிய ஒருவனாக தளபதி, புதிய நம்பிக்கை. தமிழகத்திற்கு நீங்கள் எடுக்கும் முடிவே எங்களின் இறுதி முடிவு தலைவா’ என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது ரஜினி ரசிகர்களுக்கு மத்தியில் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


