தமிழ்நாடு
‘விஜய் எதுக்கு என்ன திடீர்னு வந்து பாத்தாரு தெரியுமா..?’- ரகசியம் உடைத்த எடப்பாடியார்

நடிகர் விஜய் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்தார். அதிமுகவுக்கும் நடிகர் விஜய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக உரசல் போக்கு நிலவி வரும் சூழலில், முதல்வருடனான அவரின் சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியது.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் திரையரங்கிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர், தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

தற்போது கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பிக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதை அதிகரிக்கக் கோரி திரைத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான் நடிகர் விஜய், முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த திடீர் சந்திப்பு குறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில், ‘தமிழகத்தில் திரையரங்குகள் இன்னும் முழுதாக திறக்கப்படவில்லை. எனவே தியேட்டர்கள் முழுமையாக திறக்கப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்ததிப்பில் கூறினார் விஜய்’ என்று தெரிவித்துள்ளார்.




















