டிவி
வெறுப்பு சுழலில் மூச்சுத்திணறுகிறது- பிக்பாஸ் அர்ச்சனா அறிவித்த புது முடிவு!

அன்பு மற்றும் வெறுப்பு சுழல்களில் சிக்கி மூச்சுத் திணறுவதாக பிக்பாஸ் புகழ் விஜே அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து விஜே அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கலவை விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கின.
அர்ச்சனாவின் மகள் ஜாரா பதிவிட்ட புகைப்படத்துக்கும் கடுமையான, மோசமான கமெண்ட்ஸ்கள் பதிவாகின. இது போன்ற கமெண்ட்ஸ் மன அழுத்தம் தருவதாக அர்ச்சனா தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முடிவு கட்டும் விதமாகத் தான் ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அர்ச்சனா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்த அன்பு- வெறுப்பு சுழலில் சிக்கித் திணறிவிட்டேன். ஊகங்களுக்கு விளக்கம் அளித்தே சோர்வு அடைந்துவிட்டேன். எனது ட்விட்டர் வெளியேற்றத்தைக் கண்டு கொண்டாடத் தயாராகும் எனது வெறுப்பாளர்களே, நான் மீண்டும் வலிமையுடன் வருவேன்! உங்களுக்கான அடுத்த பலியாடை தேடுங்கள். குட்பாய் ட்விட்டர்” எனப் பதிவிட்டுள்ளார்.
I’m exhausted in this love- hate whirlpool!! Tired of clearing speculation!! For the haters who are all set to celebrate my exit from Twitter, I will bounce back stronger! Find your next victim! Goodbye Twitter!! #SpreadLoveNotHate #Iamwhoiam #LifeBeyondBiggBoss @vijaytelevision
— Anchor_Archana_official (@ArchanaChandhok) December 24, 2020


















