டிவி
பிக்பாஸ் Grand Finale-க்கு முன் வெளியேறும் அந்த 2 போட்டியாளர்கள் யார்..?

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 க்ராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சூழலில் க்ராந்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இறுதி வெற்றியாளர் அறிவிக்கும் முன்னர் 5 போட்டியாளர்களில் இருந்து இருவரை வெளியேற்ற உள்ளனர். இறுதியாக அந்த டைட்டிள் மூவரில் ஒருவருக்கு மட்டுமே என்ற நிலையில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். தற்போதைய சூழலில் கடைசி நாளான இன்று ஆரி, ரியோ, பாலாஜி, சோம் மற்றும் ரம்யா என மொத்தம் 5 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் இறுதிக்கட்ட வாக்குகளின் அடிப்படையில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளார்கள். செய்திச்சுருள் தளத்துக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளனர். இதனால், பைனல்ஸ் சுற்றுக்கு முன்னர் நிகழ்ச்சியிலிருந்து ரம்யா பாண்டியன் மற்றும் சோம் ஆகிய இருவரும் வெளியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் அடிப்படையில் இறுதியாக ஆரி, ரியோ மற்றும் பாலாஜி ஆகிய மூவர் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பர். இந்த மூவருள் ஒருவர் அதன் பின்னர் வெளியேற்றப்பட்டு அதன் பின்னர் கமல்ஹாசனால் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
#BiggBossTamil #GrandFinale – இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில..#பிக்பாஸ் #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/oBBpH2hDWz
— Vijay Television (@vijaytelevision) January 17, 2021