தமிழ்நாடு
சாதியில்லா சமுதாயத்திற்கு எதுக்கு சாதி கணக்கெடுப்பு ? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் போது சாதி கணக்கெடுப்பு எதற்கு என, கணக்கெடுப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆங்கிலேயர்கள் காலத்தில், மக்களை பிளவுபடுத்தி, ஆட்சி செய்யும் நோக்கில் சாதி கணக்கெடுப்பு கொண்டு வந்தனர்.
தற்போது சாதியில்லா சமுதாயம் நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இப்படியான சூழலில் இனி இந்தக் கணக்கெடுப்பு என்பது தேவையில்லாதது. ஏற்கெனவே தமிழக அரசு சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரித்து அறிக்கை அளிக்கும்படி ஒரு ஆணையம் அமைத்துள்ளது. எனவே, இந்தக் புதிதாக கணக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
















