தமிழ்நாடு
அரசு பேருந்துகளில் ”மக்களால் நான், மக்களுக்காகவே நான்” வாசகம்.. தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியதா அதிமுக!

தமிழக அரசு பேருந்துகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது, இதைப் பார்க்கும் போது இப்போதே அதிமுக பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதிதாக வாங்கப்பட்ட அரசு பேருந்துகளில் மட்டும் இந்த வாசகங்கள் தற்போது இடம்பெற்றுள்ளன. ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புறம் அச்சிடப்பட்டுள்ள ”மக்களால் நான், மக்களுக்காகவே நான்” வாசகத்தின் கீழ் புரட்சித் தலைவி அம்மா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிகம் பயன்படுத்திய வாசகம் பேருந்தில் அச்சிடப்படுவது இதுவே முதல்முறை. விரைவில் அனைத்து பேருந்துகளிலும் இந்த வாசகத்தை அச்சிடத் திட்டமிட்டு இருப்பதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்காகப் பயன்படுத்திய ஜெயலலிதாவின் இந்த வாசகத்தை எப்படி அரசு பேருந்துகளில் பயன்படுத்தலாம். அதிமுக இப்போதே அரசு செலவில் தேர்தல் பிரச்சாரத்தை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், வாக்குச் சீட்டுகளைத் திருத்தும் பணிகளிலும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.



















