வணிகம்
ஜியோ பங்குகளை வாங்கிய பெஸ்புக்!

உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து பேஸ்புக் வாங்கியுள்ளது.
2016-ம் ஆண்டு வணிக ரீதியான டெலிகாம் சேவையை வழங்கத் தொடங்கிய ஜியோ நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவாகியுள்ளது.
இது குறித்து இரண்டு ஜியோ, பேஸ்புக் என இரண்டு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.
பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜியோ உடன் இணைந்து, வாட்ஸ்ஆப் செயலியில் ஜியோ மார்ட் சேவையை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
















