இந்தியா
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். இதையொட்டி மலைப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.


