செய்திகள்
ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது!
Published
14 மணி நேரங்கள் agoon
By
Poovizhi
தமிழக அரசியலில் பரபரப்பாக நீடித்து வந்த ஆட்சியமைப்பு விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது. இதன் மூலம் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி சட்டப்பேரவையில் பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், தனித்து ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததால், பிற கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இதற்கிடையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது ஜெயுஎம்எல் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய அரசியல் மாற்றம் காரணமாக, தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவுபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரை சந்தித்து ஆதரவு பட்டியலை சமர்ப்பிக்கும் பணிகளில் தவெக ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் மிக வேகமாக மாறிவரும் சூழலில், விஜய் தலைமையிலான தவெக அரசு விரைவில் பதவியேற்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்கும் தவெக தலைவர் விஜய்!

தவெகவுக்கு ஆதரவு வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்!

ஆட்சியமைக்க அனுமதி கோரி ஆளுநரை சந்தித்தார் விஜய்!

நாளை முதலமைச்சராக பதவியேற்கிறாரா விஜய்? தமிழக அரசியலில் பரபரப்பு!

ஆளுநர் மாளிகை செல்லும் விஜய்: ஆட்சியமைப்பு முயற்சியில் அடுத்த கட்ட பரபரப்பு!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? தவெக, அதிமுக, திமுக நகர்வால் அரசியல் பரபரப்பு உச்சத்தில்!






















