சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் 2வது தயாரிப்பு படம் ரிலீஸ்க்கு ரெடி!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷிப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபால் இயக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் அடுத்த மாதம் ஜூன் 15ம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் கனா திரைப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டியது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில், யூடியூப் சேனலான பிளாக்ஷிப் டீமை சேர்ந்த கார்த்திக் வேணுகோபால் மற்றும் அவரது பிளாக்ஷிப் டீம் இணைந்து பணியாற்றியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் பணி முழு வீச்சில் முடிந்துள்ள நிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரியோ ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஷிரின் கஞ்ச்வாலா அறிமுகமாகிறார்.
மேலும், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ராதாரவி மற்றும் யூடியூப் பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

















