ஆன்மீகம்
சுக்கிரன் கும்ப ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் கால இடைவெளியில் தன் ராசி நிலையை மாற்றும் போது, மனித வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், அழகு, காதல், செல்வம், வசதி மற்றும் இன்பங்களை குறிக்கும் சுக்கிரன், மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார்.
சுக்கிரன் பொதுவாக ஒரு ராசியில் 23 முதல் 30 நாட்கள் வரை பயணம் செய்வார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி ஆவார். சுக்கிரனின் நிலை மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஒருவரின் நிதி நிலை, காதல் வாழ்க்கை, உறவுகள், அழகு மற்றும் வசதி தொடர்பான விஷயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும்.
அந்த வகையில், பிப்ரவரி 06, 2026 அன்று சுக்கிரன் சனி பகவானின் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த சுக்கிரன் பெயர்ச்சி ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது. கும்ப ராசி அறிவு, தொழில்நுட்பம், சமூக மாற்றம் ஆகியவற்றைக் குறிக்கும் ராசியாக இருப்பதால், இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும்.
சுக்கிரன் கும்பத்தில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளதுபோல், சிலருக்கு சிரமங்கள் மற்றும் சோதனைகள் அதிகரிக்கலாம். இப்போது இந்த காலகட்டத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதைப் பார்ப்போம்.
♍ கன்னி ராசி
சுக்கிரன் கன்னி ராசியின் 6-ஆவது வீட்டில் சஞ்சரிக்கிறார்.
இதனால் வேலை தொடர்பான சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட்டு, மருத்துவ செலவுகள் கூட வாய்ப்புள்ளது.
அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உடல் சோர்வு அதிகரிக்கும்.
செலவுகளை கட்டுப்படுத்தவில்லை என்றால், பண நெருக்கடியை சந்திக்க நேரிடலாம்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவால் அவதிப்படக்கூடும்.
♏ விருச்சிக ராசி
சுக்கிரன் விருச்சிக ராசியின் 4-ஆவது வீட்டில் பயணம் செய்கிறார்.
குடும்ப வாழ்க்கையில் மனக்கசப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம்.
வீடு தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாவிட்டால், மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மன அமைதி பாதிக்கப்படும். வேலையிலும் அழுத்தம் அதிகரிக்கும்.
விபத்துகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதால், வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை.
♒ கும்ப ராசி
சுக்கிரன் கும்ப ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
இதனால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம்.
ஆடம்பர ஆசைகள் அதிகரித்து, தேவையில்லாத பொருட்களில் செலவு செய்யும் மனநிலை உருவாகும்.
பண நிலை சீர்குலைய வாய்ப்பு இருப்பதால், சேமிப்பில் கவனம் அவசியம்.
உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, விரிசல் தோன்றக்கூடும்.
ஆரோக்கியத்தில் சோம்பேறித்தனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.





