Connect with us

ஆரோக்கியம்

பெண்களை பாதிக்கும் மற்றொரு வகை புற்றுநோய் -…சிகிச்சையால் குணமாகும்…

Published

on

நமது இந்திய மண்ணில் புற்று நோயால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் கருப்பைவாய் புற்றுநோய் போன்றவை அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வரிசைளில் இப்போது நாளமில்லா சுரப்பி எனப்படும் தைராய்டு (கழுத்துக் கழலை) புற்றுநோய் என்ற ஒன்றும் சேர்ந்து கொண்டுள்ளது.

புற்றுநோய் பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு  3 மடங்கு அதிகம் வர வாய்ப்புள்ளதாக கூறுகிறது மருத்துவ உலகம். அதேபோல் தைராய்டு பிரச்னையும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதால் அது எப்படி புற்றுநோயாக மாறுகிறது? அதை அறிந்து கொண்டு சிகிச்சை பெறுவது எப்படி என்பது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

மற்ற புற்றுநோய்களைப் போல் அல்லாமல் தைராய்டு புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் அதிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

குழந்தை உருவானதும் தைராய்டு சுரப்பி குழந்தையின் நாக்கின் அடிப்பாகத்தில் சிறிய புள்ளி மாதிரி ஆரம்பித்து இறங்கி கழுத்தில் வந்து நின்று அங்கு வளர ஆரம்பிக்கும். இது இயல்பு.

ஆனால் சில குழந்தைகளுக்கு நாக்கின் அடிப்பாகத்திலேயே அது நின்றுவிடும். சில குழந்தைகளுக்கு பாதி தூரம் வந்து நின்று விடும். இன்னும் சில குழந்தைகளுக்கு இந்த சுரப்பி இருக்கும். ஆனால் வேலை செய்யாது.

தைராய்டு சுரப்பி சரிவர வேலை செய்யவில்லை என்றால் குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். எனவேதான் குழந்தைகள் பிறந்ததுமே தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். கேரளா, கோவாவில் இதனை கட்டாயமாக வைத்திருக்கிறார்கள். இப்போது கர்நாடகாவிலும் செய்கிறார்கள்.

இந்தியாவில் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறக்கும்போதே தைராய்டு பிரச்னை இருக்கிறது. எனவே பிறக்கும்போதே குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து ரத்தத்தை எடுத்து பரிசோதித்து கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் குழந்தைகள் இயல்பாகி விடுவார்கள்.

சில குழந்தைகளுக்கு 4 அல்லது 5 வயதில் கூட இந்த தைராய்டு பிரச்னை வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில சமயங்களில் நமது உடலே நம்மை எதிர்த்து போராடும் ஆட்டோ இம்யூன் டிசீஸ் இருக்கும் போது இந்த தைராய்டு சுரப்பி வேலை செய்யாது. தைராய்டு ஹார்மோன் உடல் உறுப்புக்களுக்கும் செல்களுக்கும் பேட்டரி மாதிரி செயல்படும். இது சுரக்காதபோது உறுப்புகளும் செல்களும் பாதிக்கப்படும்.

தைராய்டு ஹார்மோன் சரியாக வேலை செய்கிறதா என்று கண்காணிக்கும் பணியை பிட்யூட்டாி ஆர்மோன்தான் செய்கிறது. தைராய்டு சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனைத் தூண்டும் பணியையும் அதிகமாக வேலை செய்தால் கட்டுப்படுத்தும் பணியையும் இந்த பிட்யூட்டரி ஆர்மோன்தான் செய்கிறது.

தைராய்டு பரிசோதனையில் பரிசோதிக்கப்படும் “டிஎஸ்எச்“ என்பது பிட்யூட்டரி ஹார்மோன்தான்.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால் பிட்யூட்டரி ஹார்மோன் அதைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இதனால் தைராய்டு சுரப்பி வேலை செய்ய முயற்சி செய்து வீங்க தொடங்கும். அப்போது மருந்துகள் எடுத்துக் கொண்டால் வீக்கம் சரியாகிவிடும். மருந்துகள் எடுக்காவிட்டால் வீக்கம் அதிகமாகி கட்டியாகிவிடும்.

சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல் கட்டி ஏற்படும். சிலருக்கு ஒரு இடத்தில் மட்டும் சிலருக்கு பரவலாகவும் கட்டிகள் ஏற்படும். இவை எல்லாமே புற்றுநோய் கட்டிகள் கிடையாது. இவற்றை ஸ்கேன் செய்து அதிலிருந்து நீர் எடுத்து பரிசோதித்து கண்டுபிடிப்பார்கள். தைராய்டு சுரப்பி வேலை செய்வதை நிறுத்தி விட்டால் வாழ்நாள் முழுதும் மாத்திரை எடுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை.

குழந்தைகளைப் பொறுத்தவரை தைராய்டு ஹார்மோன் குறைந்தாலோ சுரக்காவிட்டாலோ அவர்களின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு அவர்களின் இயக்கமே மெதுவாகிவிடும். இதயத்துடிப்பும் மெதுவாகிவிடும். மலச்சிக்கல் எற்படும். பிட்யூட்டரி சுரப்பியில் வீக்கம் ஏற்படும். உடலில் இருக்கும் நீர் வெளியேறாது.  கால் வீக்கமாகும். மாதவிலக்கு சரியாக வராது. ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். கருவுறுவதில் பிரச்னை ஏற்படும்.

தைராய்டு நோயில் ஹார்மோன் குறைவாக சுரக்கும் ஹ்ய்ப்போ தைராய்டு அதிகமாக சுரக்கும் ஹ்ய்ப்பர் தைராய்டு என இரண்டு வகை உள்ளது. இரண்டுமே பிரச்னைதான்.

கழுத்துக்கு முன்னால் பட்ாம்புச்சி மாதிரியான தோற்றத்தில்தான் தைராய்டு சுரப்பி இருக்கும். அந்த வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டால் கழுத்துப் பகுதியில் மேடும் பள்ளமுமாக இருந்தால் பேசும்போது குரல் சரியாக வரவில்லை என்றால் சாப்பிடும்போது விழுங்குவது கஷ்டமாக இருந்தால் பரிசோதித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

Translate »
Sprawozdanie rady osiedla zawierało przykłady konkretnych działań i tym samym było lepsze niż osiedla nr i. 入學資訊日 2022 | 香港高等教育科技學院. və rayon İcra hakimi rafiq cəlilov Şəhidin  büküldüyü bayrağı  şəhidin atasına təqdim etdi.