ஆன்மீகம்
1 வருடத்திற்கு பின் துலாம் செல்லும் சூரியன்: அக்டோபர் 17 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய கிரகங்கள். அதில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் பயணம் செய்வார்.
சூரியன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். ஆனால் அக்டோபர் 17, 2025 முதல் சூரியன் துலாம் ராசிக்குள் நுழையும். இதனால் தமிழ் மாதம் ஐப்பசி பிறக்கவுள்ளது.
சூரியன் துலாம் ராசிக்கு செல்லும் இந்த பெயர்ச்சி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறை மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகளை தரும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் சிறப்பு அதிர்ஷ்டம் பெறுவர்.
அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் மற்றும் தாக்கங்கள்:
தனுசு ராசி:
சூரியன் 11ஆவது வீட்டிற்கு செல்லும்.
வருமான உயர்வு, புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும் வாய்ப்பு.
முதலீடுகளில் நல்ல லாபம், புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு.
வணிகத்தில் எதிர்பாராத லாபம், சிக்கிய பணம் கைக்கு வருதல்.
கடகம் ராசி:
சூரியன் 4ஆவது வீட்டிற்கு செல்கின்றார்.
வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள்.
சமூக மதிப்பு, கௌரவம் அதிகரிக்கும்.
தொழிலில் முன்னேற்றம், புதிய ஒப்பந்தங்கள், குடும்ப பிரச்சனைகள் தீர்வு.
துலாம் ராசி:
சூரியன் 1ஆவது வீட்டிற்கு செல்வது.
தன்னம்பிக்கை அதிகரிக்கும், மதிப்பு மற்றும் மரியாதை உயரும்.
தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், புதிய தொழில் வாய்ப்புகள்.
திருமணமாகாதவர்கள் நல்ல வரன் பெறுவார்கள்.
சூரியன் துலாம் ராசிக்கு செல்லும் இந்த பெயர்ச்சி நிதி, தொழில், சமூக மதிப்பு மற்றும் குடும்பத்தில் நன்மைகள் பெருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.



