ஆரோக்கியம்
காலிஃப்ளவரை யார் சாப்பிடக்கூடாது? தவிர்க்க வேண்டிய உடல்நல பிரச்சனைகள்!

காலிஃப்ளவர் குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. ஆனால் சில உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் காலிஃப்ளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனைகள் மேலும் தீவிரமடையும்.
❌ செரிமான பிரச்சனை
வாயு, வயிற்றுப்புண், உப்புசம், அசிடிட்டி உள்ளவர்கள் காலிஃப்ளவரை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கார்போஹைட்ரேட் எளிதில் செரிமானம் ஆகாததால் பிரச்சனையை அதிகரிக்கும்.
❌ மலச்சிக்கல்
மலச்சிக்கல் பாதிப்பில் இருப்பவர்கள் காலிஃப்ளவர் சாப்பிட்டால் பிரச்சனை மோசமாகும்.
❌ தைராய்டு பிரச்சனை
தைராய்டு நோயாளிகள் காலிஃப்ளவர் சாப்பிடக்கூடாது. இது டி3, டி4 ஹார்மோன்களை பாதித்து ஹார்மோன் சமநிலையை குலைக்கும். இதனால் கூடுதல் பக்கவிளைவுகள் ஏற்படும்.
❌ சிறுநீரக கல்
சிறுநீரக கல் உள்ளவர்கள் காலிஃப்ளவரைத் தவிர்க்க வேண்டும். அதிக கல்சியம் காரணமாக கல் பிரச்சனை மோசமடையும். மேலும் இது யூரிக் அமிலத்தை அதிகரிப்பதால், யூரிக் அமில பிரச்சனையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
❌ உயர் இரத்த அழுத்தம்
காலிஃப்ளவர் இரத்தத்தை உறையச் செய்வதால், உயர்ந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அல்லது இரத்த தொடர்பான பிரச்சனையுடன் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
❌ பாலூட்டும் தாய்மார்கள்
பாலூட்டும் பெண்கள் காலிஃப்ளவர் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு வாயு பிரச்சனை, வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.


















