செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மூன்று புதிய அப்டேட்டுகள் – பெண்களுக்கு விரைவில் நல்ல செய்தி!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் – தமிழக அரசு பெண்களுக்காக கொண்டு வந்துள்ள மிகப்பெரிய நலத்திட்டங்களில் ஒன்றாகும். மாதந்தோறும் தகுதியான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் இத்திட்டத்தில், விரைவில் மூன்று முக்கிய அப்டேட்டுகள் வெளியாக உள்ளன.
தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஜூலை 15-ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம், ஆகஸ்ட் 28-ஆம் தேதியுடன் 45 நாட்களை நிறைவு செய்கிறது. அரசு விதிகளின்படி, விண்ணப்பங்கள் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.
இதன்படி, ஆகஸ்ட் 28-க்கு பின் பெண்கள் தங்களின் விண்ணப்ப நிலையை தினந்தோறும் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, விண்ணப்பித்தவர்களுக்கு அரசு நேரடியாக மூன்று வகையான அப்டேட்டுகளை அவர்களின் செல்போன்களில் SMS மூலம் அனுப்ப உள்ளது:
விண்ணப்பம் ஏற்கப்பட்டது
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது
விண்ணப்பத்தின் தற்போதைய நிலை
தற்போது 1.15 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இன்னும் பதிவு செய்யாதவர்கள், தகுதி பூர்த்தி செய்தால், விரைவில் இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
செப்டம்பர் மாதத்திலேயே புதிதாக இணைக்கப்படும் பயனாளிகளுக்கு எப்போது முதல் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்பதை அரசு அறிவிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகையால், அடுத்த 30 நாட்களில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாட்டு பெண்கள் எதிர்பார்க்கலாம்.
