இந்தியா
இலங்கையில் குண்டு வைத்தவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்களே: ராணுவம் பகீர் தகவல்!

கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். உலக நாடுகளை இந்த குண்டு வெடிப்பு சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக சிலரை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என இலங்கை ராணுவ தளபதி கூறியுள்ளார். பிபிசி செய்தியாளருக்கு பேட்டியளித்த இலங்கை ராணுவத் தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகா இதனை தெரிவித்துள்ளார்.
அதில், இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகப்படுவர்களில் சிலர் இந்தியாவின் கேரளா, பெங்களூரு, காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள். பயங்கரவாத பயிற்சி எடுப்பதற்காகவே அவர்கள் அங்கே பயணித்திருப்பார்கள் என்று நம்புகிறோம். குண்டுவெடிப்பு நிகழ்த்திய அனைவரும் கைது செய்யப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ விட்டார்கள். ஐஎஸ் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் சதியும் இதில் உள்ளது என தெரிவித்துள்ளார்.



















