இந்தியா
இந்து விரோத தற்குறி வீரமணி: எச்.ராஜா ஆவேசம்!

சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி இந்து கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது கண்டனத்தை பதிவு செய்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
மழை வேண்டி யாகம் நடத்த உத்தரவிட்டதை அடுத்து இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கருத்து தெரிவித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அறநிலையத்துறை, புரோகிதத் துறை அல்ல என கூறினார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மழை வேண்டி இந்து கோவில்களில் யாகம் நடத்த உத்தரவிட்டுள்ளது சட்டப்படி செல்லும். அனைத்து கோவில்களிலும் இது நிறைவேற்றப்பட வேண்டும். இதை கண்டித்து இந்து விரோத தற்குறி வீரமணி அறிக்கை விட்டதற்கு அனைத்து இந்துக்களும் கண்டணத்தை எல்லாவிதத்திலும் தெரிவிக்கவும் என கூறியுள்ளார்.


















