வணிகம்
444 நாட்கள் FD: 4 வங்கிகளில் எது அதிக லாபம் தரும்? முழுப் பட்டியல் இதோ!

நிலையான வைப்புத் திட்டம் (FD) என்பது பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு முதலீட்டு வகை. குறிப்பாக, குறுகிய காலத்தில் அதிக வட்டி வருமானம் பெற சில வங்கிகள் சிறப்பு FD திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், 444 நாட்களுக்கு சிறப்பு FD திட்டத்தை SBI, இந்தியன் வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி மற்றும் IOB ஆகிய நான்கு வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தில் வழக்கமான FD-க்கு மீறி சற்று அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இங்கு ரூ.10.25 லட்சம் முதலீடு செய்தால், முதிர்ச்சி தொகையாக எவ்வளவு கிடைக்கும்? எந்த வங்கி அதிக லாபம் தருகிறது? என்பதை விரிவாக பார்ப்போம்.
வங்கி வாரியாக FD முடிவுகள் – 444 நாட்கள்:
1. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI):
திட்டம்: அம்ரித் விருஷ்டி
வட்டி விகிதம்: 6.60%
முதலீடு: ₹10,25,000
மொத்த தொகை (முதிர்ச்சி): ₹11,09,958.24
வட்டி வருவாய்: ₹84,958.24
2. இந்தியன் வங்கி (Indian Bank):
வட்டி விகிதம்: 6.90%
மொத்த தொகை: ₹11,13,948.76
வட்டி வருவாய்: ₹88,948.76
3. பஞ்சாப் & சிந்த் வங்கி (Punjab & Sind Bank):
வட்டி விகிதம்: 7.05%
மொத்த தொகை: ₹11,15,948.29
வட்டி வருவாய்: ₹90,948.29
4. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB):
வட்டி விகிதம்: 7.10% (அதிகபட்சம்)
மொத்த தொகை: ₹11,16,615.44
வட்டி வருவாய்: ₹91,615.44
முக்கியக் குறிப்புகள்:
444 நாள் FD திட்டங்கள் குறுகிய காலத்துக்கான அதிக வருமான FD திட்டங்கள் ஆகும்.
இத்திட்டங்கள் பெரும்பாலும் சிறப்பு திட்டங்களாக இருக்கின்றன; அனைத்து வங்கிகளிலும் எப்போதும் கிடைப்பதில்லை.
முதலீடு செய்யும் முன், வங்கி அதிகாரிகளை நேரில் சந்தித்து உறுதிப்படுத்துவது நல்லது.
















