வணிகம்
வீட்டிலிருந்தபடியே PF இருப்பை தெரிந்து கொள்ளும் 4 எளிய வழிகள்!

EPFO பிஎஃப் இருப்பு சரிபார்ப்பு வழிகள்:
ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கு இருப்பை அறிய வீட்டிலிருந்தபடியே தற்போது நான்கு எளிய வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. EPFO (Employees’ Provident Fund Organisation) 2024-25 நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி விகிதத்தை 8.25% என அறிவித்துள்ள நிலையில், பலர் தங்களது கணக்கில் வட்டி வரவு பதிவாகியுள்ளதா என்பதை அறிய ஆவலாக உள்ளனர். இதற்கான முறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
✅ 1. ஆன்லைன் மூலமாக (EPFO Website):
இணையதள முகவரி: https://www.epfindia.gov.in
உங்கள் UAN எண், பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்.
“e-Passbook” என்பதை கிளிக் செய்யவும்.
உறுப்பினர் ஐடியைத் தேர்வு செய்ததும், PF இருப்புத் தொகை காட்சியளிக்கப்படும்.
✅ 2. உமாங் ஆப் (UMANG App) மூலம்:
UMANG Appஐ தங்களது மொபைலில் நிறுவவும்.
“EPFO” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
“Employee Centric Services” -> “View Passbook” ஐ கிளிக் செய்யவும்.
உங்கள் UAN, பாஸ்வேர்டு மற்றும் OTP-ஐ வழங்கி PF இருப்பை பார்வையிடலாம்.
✅ 3. எஸ்எம்எஸ் (SMS) மூலம் PF இருப்பு:
பதிவு செய்யப்பட்ட மொபைலிலிருந்து:
EPFOHO UANஎன டைப் செய்து
7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்.தாய்மொழியில் பெற விரும்பினால்,
உதாரணமாக தமிழில்:EPFOHO UAN TAM
✅ 4. மிஸ்டு கால் மூலம் PF இருப்பு:
பதிவு செய்யப்பட்ட மொபைலிலிருந்து
011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.சில விநாடிகளில் உங்கள் PF இருப்பு விவரங்கள் SMS மூலம் வரும்.
















