Connect with us

செய்திகள்

முகரம் பண்டிகை – ஜூலை 7 அரசு விடுமுறை இல்லை என்று தமிழக அரசு விளக்கம்!

Published

on

முகரம் பண்டிகை – ஜூலை 7 அரசு விடுமுறை இல்லை: தவறான தகவல்களுக்கு விளக்கம்!

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான முகரம் (மொஹரம்) குறித்து சமூக வலைதளங்களில் “ஜூலை 7, 2025 அரசு விடுமுறை” என தவறான தகவல் பரவி வருகிறது. ஆனால், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம் தற்போது இதற்கான உண்மை நிலையை வெளிச்சத்தில் கொண்டு வந்துள்ளது.

மொகரம் பண்டிகை ஜூலை 6 ஞாயிறு நாளில் கொண்டாடப்படுகிறது

தமிழ்நாடு அரசு தலைமை காஜியின் அறிவிப்பின்படி, மொஹரம் மாதத்தின் பிறை 2025-ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று ஆரம்பமானதால், யொமே ஷஹாதத் எனப்படும் முகரம் பண்டிகை ஜூலை 6 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 7 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என பரவும் தகவல் ஒரு வதந்தி மட்டுமே என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெளிவாகக் கூறியுள்ளது. பொதுமக்கள் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ வட்டார அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Translate »
pifteau henri, biolinker.