வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3131 எழுத்தர், டேட்டா எண்றி பணிகள்!

மத்திய அரசில் பணியாற்றும் ஆசையா? தற்போது மத்திய அரசின் சிப்பிஎஸ் (SSC) தேர்வுகள் மூலம், 3131 காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் Lower Division Clerk (LDC), Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), மற்றும் DEO Grade ‘A’ உள்ளிட்ட பணிகள் அடங்கும். விண்ணப்பிக்க விரும்பும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 2025 ஜூலை 18க்குள் https://ssc.gov.in/ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்:
பதவிகள்:
LDC / JSA
Data Entry Operator
Data Entry Operator, Grade A
மொத்த காலியிடங்கள்: 3131
🎓 தகுதி விவரம்:
கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி. (DEO பதவிக்கு கூடுதல் தகுதி தேவைப்படலாம்)
வயது வரம்பு: 18 முதல் 27 வயதுக்குள் (01.01.2026 அன்று).
SC/ST – 5 ஆண்டு தளர்வு
OBC – 3 ஆண்டு தளர்வு
மாற்றுத் திறனாளிகள் – 10 ஆண்டு தளர்வு
சம்பள விவரம்:
LDC / JSA: ரூ.19,900 – ₹63,200 (Pay Level 2)
DEO: ₹25,500 – ₹81,100 (Level 4) / ₹29,200 – ₹92,300 (Level 5)
DEO Grade A: ₹25,500 – ₹81,100
தேர்வு முறை:
Tier I (முதல் நிலை தேர்வு):
100 கேள்விகள் – 200 மதிப்பெண்கள் – 60 நிமிடங்கள்
English, General Awareness, Reasoning, Maths – தலா 25 கேள்விகள்
தவறான விடைக்கு 0.5 குறைப்பு
Tier II (முதன்மை தேர்வு):
135 கேள்விகள் – 405 மதிப்பெண்கள் – 2 மணி 15 நிமிடங்கள்
English (40), GA (20), Maths (30), Reasoning (30), Computer (15)
தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிப்பு
Skill Test / Typing Test: தட்டச்சு மற்றும் திறனறி தேர்வு (தகுதித் தேர்வாகும்)
🧾 விண்ணப்ப முறை மற்றும் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம்: ₹100
SC/ST மற்றும் பெண்களுக்கு கட்டண விலக்கு
விண்ணப்பிக்கும் இணையதளம்: https://ssc.gov.in
கடைசி தேதி: 18.07.2025

















