Connect with us

வணிகம்

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!

Published

on

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு முழுவதும் பணிக்கால நீட்டிப்பு வழங்க முடியாது – பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் காலத்தில், அவர்கள் பணியாற்றும் கல்வியாண்டு முடிவான மே மாதம் 31ஆம் தேதி வரை மறுநியமனம் (reappointment) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது.

இந்தத் தீர்மானம் குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளார். அதில், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே கல்வியாண்டின் கடைசி வேலை நாளான ஏப்ரல் மாதம் வரை மறுநியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை மே 31 வரை நீட்டிக்க அனுமதி கோரப்பட்டிருந்தாலும், அரசு மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக “ஓய்வுக்குப் பின் பணியாற்றும் வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது” எனச் சில இடங்களில் தவறான செய்திகள் வெளியானதை பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Translate »
You earn 50% commission on every sale you refer – with zero production on your end..