Connect with us

இந்தியா

விமான விபத்துக்கு முன்பு பகிரப்பட்ட வீடியோ: “சந்தோஷமா போறோம்” என்ற வெட்கமுறும் கடைசி தருணம்!

Published

on


சந்தோஷமாக பயணத்தை தொடங்கினார்கள்… ஆனால் அது கடைசி பயணமாகிவிட்டது.

அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI171) லண்டன் செல்லும் பாதையில் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அதில் 204 பேர் உயிரிழந்தனர், 41 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜேமி ரே மீக் மற்றும் ஃபியோங்கல் கிரீன்லா-மீக் ஆகிய இருவரும் பயணித்தனர். அவர்கள், இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கும், வீட்டுக்கு திரும்பும் மகிழ்ச்சியில், விமானம் புறப்படுவதற்கு முன்பாக ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தனர்.

“குட்பை இந்தியா… ஹேப்பி… இன்னும் 10 மணி நேரத்தில் இங்கிலாந்தில் இருக்கப்போறோம்!” என்று மகிழ்ச்சியுடன் அவர்கள் பதிவு செய்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோ தான் அவர்களது கடைசி நினைவாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள், குடும்பங்கள், மாணவர்கள் என பலரும் இந்த பயணத்தில் இருந்தனர். விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 11 சிறுவர்/சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். 3 மருத்துவக் கல்லூரி மாணவர்களும் உயிரிழந்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில், அகமதாபாத் அருகே உள்ள அரசு மருத்துவமனை விடுதி வளாகத்தில் விழுந்து தீப்பற்றியது. விமானம் வானில் தள்ளாடியபின் கீழே விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் பல குடும்பங்கள் இடிந்துள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விபத்துக்கு இரங்கல் தெரிவித்தார். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு மற்றும் DGCA, AAIB ஆகியவை விபத்துக்கான காரணங்களை விசாரிக்கின்றன.

Translate »
Products collect leads.