பங்கு சந்தை
Zerodha IPO? இந்தக் கணமே வேண்டாம் – நிதின் காமத் தெளிவான பதில்!

சென்னை:
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் தரகு நிறுவனமான Zerodha, IPO வெளியீடு செய்யும் திட்டமே இப்போது இல்லை என அதன் நிறுவனர் மற்றும் CEO நிதின் காமத் தெளிவாக தெரிவித்துள்ளார். தற்போதைய வருமான சரிவும், ஐபிஓவின் தேவையின்மையும் இந்த முடிவுக்கான காரணங்கள் என அவர் கூறுகிறார்.
Zerodha இன் வருமானத்தில் இந்த ஆண்டு 10% முதல் 20% வரை சரிவு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிறுவனம் ரூ.10,000 கோடி ஆண்டு வருமான இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக நிதின் காமத் தெரிவித்தார்.
💬 ஐபிஓ வெளியீடு குறித்து நிதின் காமத்தின் கூற்றுகள்:
Zerodha-வின் நிதி நிலை வலுவாகவே உள்ளது. எனவே கூடுதல் முதலீடு அல்லது நிதி தேவைப்படவில்லை.
பங்குச்சந்தை மற்றும் ஒப்பந்த வர்த்தகங்களில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டி கணிக்க முடியாது, இது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டால், Zerodha-விற்கு அதிக மதிப்பீடு கிடைக்க வாய்ப்பு குறைவு. தற்போதைய மதிப்பீட்டின் 1-2 மடங்கு மட்டுமே பெறக்கூடும் என நிதின் காமத் கூறினார்.
IPO மூலம் வரும் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்புகள் நிறுவனத்தின் நீண்டகால திட்டங்களை பாதிக்கக்கூடும்.
மேலும், IPO வந்தால் வருமானத்தைக் குறித்து தொடர்ந்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் வரும், இது Zerodha-விற்கு பிடிக்காத சூழ்நிலையாக இருக்கலாம்.














