ஆன்மீகம்
குரு புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுகிட்டு பணமழை கொட்டப்போகுது…!

குரு பகவான் (Jupiter) மற்றும் புதன் (Mercury) தங்களது ஒற்றுமையில் 60 டிகிரியில் நின்று, லாப திருஷ்டி யோகம் உருவாக்கியுள்ளன. இது 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய சுப யோகமாக மாறுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக, மேஷம், மிதுனம் மற்றும் மகர ராசிக்காரர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
மேஷம்: குரு புதனின் லாப திருஷ்டி யோகத்தின் காரணமாக, மேஷ ராசிக்காரர்கள் எந்த வேலையிலும் வெற்றி பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரம் கிட்டும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள், புதிய பொறுப்புகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் நல்ல உறவுகள் உருவாகும். வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த லாப திருஷ்டி யோகம் வேலைகளில் சிறந்த வெற்றியை வழங்கும். அவர்களின் அலுவலக செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிட்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.


