ஆன்மீகம்
அட்சய திருதியை 2025: இந்த 4 பொருட்களை வாசலில் வையுங்கள் – செல்வம், சந்தோஷம் நிரம்பும் வீடு!

அட்சய திருதியை 2025 என்பது ஒரு புண்ணியமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில், நம் வீடு செல்வம், மகிழ்ச்சி மற்றும் நன்மைகளால் நிரம்பி வழிவதற்கான பல பாரம்பரிய வழிமுறைகள் உள்ளன. இந்த ஆண்டு, அட்சய திருதியை ஏப்ரல் 30, 2025 அன்று கொண்டாடப்படுகிறது.
சித்திரை மாத சுக்ல பட்சம் 14ம் நாளான இதே நாளில் லட்சுமி தேவி மற்றும் செல்வ தேவன் குபேரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. “அட்சயம்” என்றால் குறைவில்லாதது என அர்த்தம். இந்த நாளில் செய்யும் நற்பணிகள் பல மடங்காக நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது.
உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த பிரபல ஆச்சார்யா ஆனந்த் பரத்வாஜ் அவர்கள் கூறியபடி, அட்சய திருதியை நாளில் வீட்டு வாசலில் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களை வைத்து செய்வது லட்சுமி தேவியை மகிழ்வித்து செல்வம் அதிகரிக்கச் செய்யும்:
1. விளக்கு:
அட்சய திருதியை அன்று, வீட்டு நுழைவாயிலின் இருபுறமும் விளக்குகளை ஏற்றுவது முக்கியம். இது வீடு முழுவதும் ஒளியும் நேர்மறை ஆற்றலும் பரவுவதற்கு உதவும். லட்சுமி தேவி மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வருகிறார் என நம்பப்படுகிறது.
2. தோரணம்:
மா இலை, சாமந்தி பூ மற்றும் மயில் இறகுகளால் செய்யப்பட்ட தோரணத்தை வாசலில் கட்டுவது மங்களகரமான செயல். இது எதிர்மறை ஆற்றலை அகற்றி, நல்வாழ்வை கூட்டும். அட்சய திருதியை அன்று தோரணம் கட்டுவது ஆண்டு முழுவதும் நன்மைகள் கிடைக்க வழிவகுக்கும்.
3. ரங்கோலி:
லட்சுமி தேவியை வரவேற்கும் ஒரு அழகான வழி – வாசலில் பாத சின்னம் போன்று ரங்கோலி வடிவமைத்தல். இது தெய்வீக ஆற்றலை அழைத்து வீட்டில் செழிப்பை தரும்.
4. ஸ்வஸ்திக் சின்னம்:
ஸ்வஸ்திக் என்பது புனிதமும் பாசிட்டிவ் சக்தியையும் குறிக்கிறது. வாசலில் இது வரையப்படும் போது, வீடு முழுவதும் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலைபேறும்.
இந்த நான்கு பரம்பரிய வழிமுறைகளையும் அட்சய திருதியை அன்று பின்பற்றுவதன் மூலம், உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.


