ஆன்மீகம்
அட்சய திருதியை முழுப் பலனும் பெற வீட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள் – ஜோதிட நிபுணர் கூறும் முக்கிய குறிப்புகள்!

அட்சய திருதியை 2025: செல்வம் பெருக வீட்டில் செய்ய வேண்டிய ஜோதிட பரிந்துரைகள்!
இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளாகிய ஏப்ரல் 30, 2025 அன்று, நம் வாழ்வில் செல்வச் செழிப்பு பெருக ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சில முக்கிய விசயங்களை கடைப்பிடிக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது நம் வீட்டில் செல்வம் அட்சய பாத்திரம் போல பன்மடங்கு பெருகும் என்று நம்பப்படுகிறது. இது மட்டுமல்லாமல், தங்கம் வாங்க இயலாதவர்கள் தினசரி பயன்படுத்தப்படும் அனுபயோகப் பொருட்களையும் வாங்கலாம். இதுவும் நன்மை தரும்.
🔸 இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?
சித்திரை மாத வளர்பிறையில் வரும் இந்த திருதியை திதி, சூரியன் மேஷ ராசியில் உச்சத்தில் இருக்கும்போது வருகிறது. இதுவே மகாபாரத காலத்தில் பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் அட்சய பாத்திரம் அளித்த நாளாகக் கருதப்படுகிறது. அந்த பாத்திரத்தில் எதையும் போட்டால் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
🔸 வீட்டில் செய்ய வேண்டியவை:
பூஜை அறையில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பூ, பழம் வைத்து வழிபட வேண்டும்.
காலை எழுந்தவுடன் மகா விஷ்ணு, குபேரர் மற்றும் விநாயகரை வணங்க வேண்டும்.
பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
🔸 வாங்கும் சிறந்த நேரங்கள்:
காலை 6:00 – 7:00 : புதன் ஓரை – லாபம் தரும் நேரம்
காலை 9:00 – 10:00 : குரு ஓரை – நகை வாங்க ஏற்ற நேரம்
மதியம் 1:30 மணிக்கு மேல் : அனைத்து பொருட்களையும் வாங்க சிறந்த நேரம்
இந்த நன்னாளில், நம்பிக்கையுடன் செய்யும் பூஜைகள், கொள்முதல்கள் நம் வாழ்க்கையில் அட்சய செல்வம் மற்றும் வாழ்வில் வளம் ஏற்படுத்தும் என்பதை ஜோதிட நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.








